சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
16

கோவை; தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் பானுலதா தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் தொகுப்பு ஊதியத்தை ரத்து செய்து, அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன, உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.