கோவை 1054 டன் யூரியா வந்தது

0
21

கோவை, டிச. 27: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் விவசாய சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்த நிலையில், உரங்கள் விநியோகிக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆந்திராவில் இருந்து 1054 டன் ஐபிஎல் நிறுவனத்தின் யூரியா உரம் சரக்கு ரயில் மூலம் நேற்று வடகோவை வந்தடைந்தது. இதே போல் தூத்துக்குடியில் இருந்து ஐபிஎல் பொட்டாசியம் 1,000 டன் வந்தது. இந்த உரங்கள் ஒதுக்கீடு பெறப்பட்ட கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு வேளாண் அதிகாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.