கோவை வடவள்ளியில் பீரோவில் வைத்திருந்த 29 பவுன் நகை மாயம்

0
7

கோவை, ஜன. 10: கோவை வடவள்ளியில் பீரோவில் வைத்திருந்த 29 பவுன் நகை மாயமானது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை வடவள்ளி சூப்பர் கார்டன் அவன்யுவை சேர்ந்தவர் பிரபாதேவி (72). இவர் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பிரபாதேவியின் தயார் உயிரிந்தார். இதனால் வீட்டிற்கு ஆட்களை வைத்து பெயிண்ட் அடித்தார். அப்போது பிரபாதேவியின் சகோதரி பீரோவில் 29 பவுன் தங்க நகையை வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாதேவி நகைளை எடுப்பதற்காக பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை காணாமல் போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாதேவி மற்றும் அவரது சகோதரி வீடு முழுவதும் நகைகளை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து பிரபாதேவி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்