கோவை வக்கீல்கள் சங்க தேர்தல் பாலகிருஷ்ணன் மீண்டும் தலைவராக தேர்வு

0
5

கோவை, மார்ச் 29: கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்துக்கு 2025-2026ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் (பெண்கள் மட்டும்), பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் 6 பேர் (4 ஆண்கள், 1 பெண்) என மொத்தம் 11 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 3,326 உறுப்பினர்களில், 2,306 பேர் வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை வரை நடந்தது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.பாலகிருஷ்ணன், 1,091 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவர், 5வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக ஆர். திருஞானசம்பந்தம், செயலாளராக கே.சுதீஷ், பொருளாளராக டி.ரவிச்சந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்களாக ஆர்.தர்மலிங்கம், எஸ்.ஈஸ்வரமூர்த்தி, பி.சங்கர்ஆனந்தம், ஜி.சந்தோஷ், வி.விஷ்ணு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இணை செயலாளர், ஒரு நிர்வாக குழு உறுப்பினர் என இரண்டு பொறுப்புகளுக்கு பெண் வக்கீல்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தேர்வு செய்யப்பட்டு முடித்தவுடன், வரும் ஏப்ரல் 2ம் தேதி பதவி ஏற்பு விழா நடக்கிறது.