கோவை,; கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி நடந்துள்ளது என்று கோவை ஈச்சனாரியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஈச்சனாரியை சேர்ந்த புஷ்பம்மாள், 85, மதுக்கரை கிராமம் 1020/2ஏ, 1021/2ஏ ஆகிய சர்வே எண் கொண்ட நிலம் 2,463 சதுரமீட்டர் நீளம் கொண்டது.
அதை மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தினர். அதற்கு 2,28,80,039ரூபாய் வழங்க அதிகாரிகள் சம்மதித்து எழுத்துப்பூர்வ சம்மத கடிதம் வழங்கினர்.
ஆனால் அதன்படி தங்களுக்கு முறையாக நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை இதுவரை வந்து சேரவில்லை. அதில் சில லட்சங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஒவ்வொரு நிலத்துக்கும் எவ்வளவு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.