கோவை ரேஸ்கோர்ஸ்பகுதியை சேர்ந்தவர்சைலேஸ்எத்திராஜ் (வயது 52). இவர்சொந்தமாக சிங்காநல்லூரில்ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு வெங்கடலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள்திருமணமாகி கணவருடன்கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
சைலேஸ்எத்திராஜ், 84 வயதாகும் தனது தாயார் மற்றும் மனைவியுடன் ரேஸ்கோர்ஸ் கலெக்டர் பங்களா அருகே தனது வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்குஉதவி செய்வதற்காகஜார்க்கண்ட்மாநிலத்தை சேர்ந்தபிக்காஷ்குமார்ராய் (20) என்ற வாலிபரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். பிக்காஷ்குமார்ராய் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகசைலேஸ்எத்திராஜ் வீட்டில்வேலை பார்த்துவந்தார். இவர்தவிர சமையல்,தோட்டவேலை, காவலாளி என்று 5-க்கும்மேற்பட்ட வேலைக்காரர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில்கடந்த 28-ந்தேதிசைலேஸ்எத்திராஜ் தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள மகள்வீட்டிற்கு சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கடந்த 30-ந்தேதிவீடுதிரும்பினர்.
அப்போது அங்கு உள்ள ரகசிய அறையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், கம்மல்,தாலி சங்கிலி, தங்க வளையல்,ரூ.17 லட்சத்து 50 ஆயிரம்ரொக்க பணம்ஆகியவை திருடப்பட்டுஇருந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து சைலேஸ்எத்திராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில்வேலை செய்தவர்களிடம்விசாரித்தனர். அதில் ஜார்க்கண்ட்மாநிலத்தை சேர்ந்தபிக்காஷ்குமார்ராய் மாயமாகிஇருந்தது தெரியவந்தது.அவரை செல்போன்மூலம் தொடர்பு கொண்ட போதுசுவிட்ச்-ஆப் என்றுவந்தது.இதைத்தொடர்ந்துபிக்காஷ்குமார்ராய் மீது சந்தேகம் ஏற்பட்டது.திருட்டுபோனநகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்புரூ.2 கோடி இருக்கும்என கூறப்படுகிறது.இந்த சம்பவம்குறித்துசைலேஸ்எத்திராஜ், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்போில்போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்தரேகைகளை சேகரித்தனர்.
திருட்டு நடந்த வீட்டில் இருந்தகண்காணிப்பு கேமராவில்பதிவான காட்சிகளைவைத்து போலீசார்விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் கடந்த 29-ந் தேதி வீட்டில்வேலை பார்த்தபிக்காஷ்குமார்ராய் கையில்ஒரு பேக்குடன் வீட்டில் இருந்து வெளியேசெல்வது தெளிவாக தெரிந்தது.
இதையடுத்து ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்தகண்காணிப்பு கேமராவை போலீசார்ஆய்வு செய்தனர். அப்போதுபிக்காஷ்குமார்ராய், கோவையில் இருந்துபாட்னா செல்லும்ரெயிலில்ஏறியது தெரியவந்தது.
இதையடுத்துமாநகர போலீஸ்கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில்துணை கமிஷனர்பெருமாள் மேற்பார்வையில்சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார்ரெயில்வே போலீசாரின்உதவியுடன் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பாட்னா ரெயில்நிலையத்தில் வைத்துபிக்காஷ்குமார்ராயை கைதுசெய்தனர்.
அத்துடன் அவர் பையில் வைத்து இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும்பணத்தை பறிமுதல்செய்தனர்.ரூ.2 கோடிக்கும் மேலான தங்கம், வைர நகை, பணம்திருட்டு சம்பவம்என்பதால் அவரை அங்குஉள்ள கோர்ட்டில்ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவரை விமானம் மூலம் கோவை அழைத்து வருகிறார்கள். மில் அதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள்,பணத்தை திருடிவடமாநிலத்துக்குதப்பிச்செல்லமுயன்றவாலிபர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.