கோவை மாவட்ட கால்பந்து சங்கத்துக்கு ஜன.5ல் தேர்தல்

0
18

கோவை, டிச. 24: கோவை மாவட்ட கால்பந்து சங்கத்துக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால், இந்த அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கோவை மாவட்டத்ைத சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.பி.ராஜ் முன்னிலையில் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.வி.ராஜை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கோவை மாவட்ட கால்பந்து சங்க உறுப்பினர்கள் கூட்டம், நீதிபதி ஐ.வி.ராஜ் தலைமையில் கோவையில் நடந்தது. இதில், தேர்தல் நடத்தும் செயல்முறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வருகின்ற 2025 ஜனவரி 1ம் தேதி காலை 10.30 மணிக்கு கோவை ஆபீஸ்சர்ஸ் கிளப் வளாகத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய 35 உறுப்பினர்களுக்கு தேர்தல் அட்டவணை விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் காலை நடக்கும் ஆண்டுப்பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து இந்த தேர்தல் நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிக்கு உதவியாக, வக்கீல்கள் கேப்டன் ரா.சஞ்சீவ் குமார், பி.முத்துக்குமார் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.