கோவை மாவட்டத்தில் 42 முதல்வர் மருந்தகங்கள்

0
68

கோவை; தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், பொதுப்பெயர் உள்ள (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை, குறைந்த விலையில் விற்பனை செய்ய, தமிழகத்தில், 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளன.

இதற்காக, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோவை மாவட்டத்தில் இருந்து, 61 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் கூட்டுறவு சங்கங்களுக்கு, 22 மருந்தகங்களும், தனி நபர்களுக்கு, 20 மருந்தகங்களும் மொத்தம், 42 மருந்தகங்களுக்கு, மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோவை மாநகர பகுதிகளில், கூட்டுறவு சங்கம் சார்பில் 19 கடைகளும், தனியார் சார்பில், 20 கடைகளும் திறக்கப்படுகின்றன. திறக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை.

மருந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்’ என்றார்.