கோவை மாநகர போலீசார் திட்டம் : குற்றம் தடுக்க கூடுதல் ‘கண்கள்

0
13

கோவை; குற்றச்சம்பவங்களை கண் காணிக்க, மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்களை அதிகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சமீப காலமாக, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சி.சி.டி.வி., கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த, அக்., மாதம், தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன், கோவையில் பூட்டிய வீட்டில் புகுந்து குஜராத்தை சேர்ந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமரா உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை

இந்நிலையில், மாநகரில் தற்போது, 29 ஆயிரத்து 601 கேமராக்கள் உள்ளன. அதில், பீளமேடு பகுதியில் 3,272, சரவணம்பட்டியில், 1,789, சிங்காநல்லுாரில் 6,074 கேமராக்கள் உள்ளன.

இந்த மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் குடியிருப்புகள் அதிகம். எனவே, அப்பகுதிகளில் கேமராக்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு சங்கங்களை தொடர்பு கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கேமரா பொருத்த வேண்டுகோள் விடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடியிருப்பு பகுதிகளின் நுழைவாயில்களில் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், சரவணம்பட்டியில் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டன. துடியலுார், சிங்காநல்லுார், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மாநகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க வசதியாக இருக்கும்’ என்றார்.