கோவை மாநகராட்சி துணை கமிஷனர் மாற்றம்

0
23

கோவை: கோவை மாநகராட்சியில் இரண்டு துணை கமிஷனர் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலான அதிகாரியான செல்வசுரபி, இணை இயக் குனர் அந்தஸ்திலான அதிகாரியான சிவக்குமார் பணிபுரிந்தனர். இதில், செல்வசுரபி, கடந்த ஆக., மாதம் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக மாறுதலாகிச் சென்றார். ஒட்டுமொத்த பொறுப்புகளையும் சிவக்குமார் கவனித்து வந்தார்.

இச்சூழலில், துணை கமிஷனர் சிவக்குமார் மதுரை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, திருப்பூர் மாநகராட்சியில் துணை கமிஷனராக பணிபுரியும் சுல்தானா, நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.