கோவை கொடிசியாவில் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் கண்காட்சி ; 3 நாட்கள் நடக்கிறது

0
76

கோவை கொடிசியா சார்பில்மூலப்பொருட்கள், இடுபொருட்கள் மற்றும் சேவைக்கான சர்வதேச ராமேட் இந்தியா 2019கண்காட்சி கோவைஅவினாசி சாலையில்உள்ள கொடிசியாஅரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கொடிசியாவின் தலைவர் ராமமூர்த்தி, கண்காட்சியின் தலைவர் செந்தில்குமார்,துணை தலைவர்சரவணன்,கொடிசியா செயலாளர்தேவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை கொடிசியா சார்பில்தொழிற்சாலைகளுக்கு தேவையானமூலப்பொருட்கள், இடுபொருட்கள் மற்றும் சேவைக்கான சர்வதேச ராமேட் முதலாவது கண்காட்சி வருகிற 18-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில்பவுண்டரி தொழிற்சாலைகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர், மறுசுழற்சி,பாதுகாப்பு பொருட்கள்சப்ளையர்கள், ஆட்டோமேஷன், ரப்பர், மருத்துவ எந்திர தயாரிப்பு, மின்னணு பொருட்கள்,நார் தொழிற்சாலைகள், ஷீட் மெட்டல்பார்மிங், டூல் ரூம், மென்பொருட்கள், ஸ்பெஷல்கோட்டிங்மற்றும் பெயிண்டிங், பேக்கேஜிங், டிசைனிங், மரவேலைப்பாட்டு தொழிற்சாலைகள்மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் ஆகியநிறுவனங்களுக்கு தேவையானமூலப்பொருட்களை கொண்டகண்காட்சியாகஇந்த கண்காட்சிஅமைக்கப்படுகிறது.

மேலும்இந்த கண்காட்சிஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல், என்ஜினீயரிங், பவுண்டரி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ரெயில் மற்றும்விமான போக்குவரத்து, ராணுவம், எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்காட்சியில் புதுடெல்லி, மேற்குவங்கம், மராட்டியம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து 82 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தென்கொரியாவிலிருந்து ஒரு நிறுவனமும் பங்கேற்கிறது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் என்.எஸ்.ஐ.சி.யின் செயல்பாட்டு இயக்குனர் உதயகுமார், எம்.எஸ்.எம்.இ.முதன்மை இயக்குனர் பன்னீர்செல்வம், வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அதிகாரி தனவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றனர். கண்காட்சி காலை 10மணிக்கு தொடங்கிமாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.