கோவை ஓட்டலில் விபசாரம் உரிமையாளர் , பெண்கள் உட்பட 6 பேர் கைது

0
6

கோவை, மார்ச் 23: கோவை உக்கடம் போலீசாருக்கு டவுன் ஹால் மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் அரவிந்த், மேலாளர் தாமோதரன், ஊழியர்கள் இப்ராகிம், கருப்புசாமி மற்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 2 பேர் ஆகியோரை கைது செய்தனர்.