கோவை ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி

0
17

தொண்டாமுத்துார்: நூற்றுக்கணக்கான சிவனடியார்கள், சூர்ய குண்ட மண்டபத்தில், தேவாரப் பாடல்களை பாடினர். தொடர்ந்து, ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு, சப்தரிஷி ஆரத்தி நடந்தது.

இதில், காசி விசுவநாதர் கோவிலில் இருந்து வந்திருந்த 7 உபாசகர்கள், யோகேஸ்வரலிங்கத்தை சுற்றி அமர்ந்து, மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து, ஆரத்தி செய்முறையை துவங்கினர்.

தொடர்ந்து, தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன், அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை, அங்கு சக்தி வாய்ந்த சூழலை உருவாக்கியது.

அதன் பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றன. இதில், மயிலாடுதுறை மாவட்டம், சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.