கோவை ஆர்டிஓ அதிகாரிகள் மாற்றம்

0
5

கோவை, பிப். 24: தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த பிரதீபா, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன், மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.