கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் லட்சுமிபுரத்தில் துளாவூர் பரம்பரை எலும்பு முறிவு-வர்மா கிளினிக் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக செயல்படும் இந்த கிளினிக்கை பாலசுப்பிரமணியம் என்பவர் நடத்தி வருகிறார். அவர் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. அவர் எந்த படிப்பு படித்துள்ளார் என்பதும் தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வர்ம வைத்தியசாலையை நடத்தி வந்த பாலசுப்பிரமணியம் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என்றும், அவரிடம் உரிய மருத்துவசான்றிதழ் இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டாக்டர் என்றுகூறி சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் பாலசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.