கோவை; கோவையில் குற்றச்சம்பவங்களை குறைக்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை டி.ஐ.ஜி., சசி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு அதிக குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், அதிக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன் காரணமாக, சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
குற்றச்சம்பவங்களை கண்காணிக்க, சி.சி.டி.வி., கேமராக்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 6,343 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த ஆண்டு 4,078 கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திருட்டு போன சொத்துக்களில், 78 சதவீதம்மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.