கோவையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

0
58

கோவை; கோவையில் பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, அதற்கான மாத்திரை பள்ளி, கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்களில் நேற்று வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில், நேற்று 1697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1070 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் வாயிலாக, அல்பெண்டாசோல் என்னும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது

கோவையில், ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட 9.56 லட்சம் குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையுள்ள 2.56 லட்சம் பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து) என மொத்தம், 12லட்சத்து 12,944 பயனாளிகள் பயடைய உள்ளனர். இன்று (நேற்று) விடுபட்டவர்களுக்கு, 17ம் தேதி வழங்கப்படும்.

குடற்புழு நீக்க மருந்து உணவு உட்கொண்ட பின்னர், நன்றாக சப்பி மென்று விழுங்கவேண்டும்; பின்னர் தண்ணீர் குடிக்கவேண்டும். அப்படியே விழுங்க கூடாது. கோவையில், மருந்து வழங்குவது குறித்த அறிவுறுத்தல்கள் அந்தந்த நோடல் அலுவலர்களுக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.