கோவையில் அமித்ஷாவை கண்டித்து போஸ்டர்கள்

0
44

கோவை, டிச. 21: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதாக கண்டனங்கள் வலுத்து வருகிறது. பல இடங்களில் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, கோவையில் திமுக உள்ளிட்ட பலர் லங்கா கார்னர், ரயில் நிலையம், அவிநாசி மேம்பாலம் ஆகிய பல இடங்களில் அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘‘அம்பேத்கர தொட்ட.., நீ கெட்ட’’, சமூக அநீதிகளிலிருந்து இந்தியாவை விடுவித்தவர் டாக்டர் அம்பேத்கர், அம்பேத்கர் புகழ் ஓங்குக, என பல்வேறு வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.