கோவையில் அதிகாரிகள் ஆலோசனை: மாசாணியம்மனுக்கு திருக்குட நீராட்டு

0
14

கோவை : பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை வெகு சிறப்பாக நடத்த, அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

திருக்குடநன்னீராட்டு விழாவுக்கு முன்னதாகமேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது: மாசாணியம்மன் திருக்கோவிலில், டிச.,12ல் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது. டிச.,6ல்பூர்வாங்க பூஜையுடன் விழா துவங்குகிறது.

விழாவுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தர உள்ளதால், பாதுகாப்புப்பணியில் போதுமான போலீசார் நியமிக்க வேண்டும். தகவல் மையங்கள், புறக்காவல் நிலையங்கள் அமைத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும், நெரிசல் உள்ள பாதைகளை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். அவசர கால வழி அவசியம். விழாவை வெகு சிறப்பாக நடத்த அனைத்துதுறை அதிகாரிகள், பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப் – கலெக்டர் கேத்ரின் சரண்யா, அறங்காவலர் குழு தலைவர் முரளிதரன்,வால்பாறை டி.எஸ்.பி.,ஸ்ரீநிதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.