கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு 3வது நேரடி விமான போக்குவரத்து

0
11

கோவை; கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு, 3வது நேரடி விமான போக்குவரத்தை துவக்க, இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு, நேரடி விமான போக்குவரத்தை இண்டிகோ வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கி வந்தது. தற்போது, 3வது விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது.

வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் இயக்கப்பட்டு வந்த இந்த விமானம், மார்ச் இறுதி திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயங்கும். சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் வந்தடையும். கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்த விமான போக்குவரத்தை இண்டிகோ துவங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதோடு, சிங்கப்பூருக்கானவணிக வாய்ப்புகளும், காய்கறி ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.