கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் பில்லுார்-1 மற்றும் பில்லுார்-2 திட்டத்தில் கொண்டு வரும் பிரதான குழாய்களில், கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணி, நாளையும் (24ம் தேதி), நாளை மறுதினமும் (25ம் தேதி) மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்விரு திட்டங்களில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கனுார் ரோடு, கணபதி, ஆவராம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ.உ.சி., பூங்கா, சித்தாபுதுார், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில், குடிநீர் வினியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும்.
பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை, சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.