கோவில்களில் சிறப்பு பூஜை

0
90

ஆடிப்பூர விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆடிப்பூர விழா

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மனித குலத்தின் துயர்கள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டி ப்ரத்யங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் வரமிளகாய் மூலம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, பக்தர்கள் தங்கள் குறைதீர்க்க வேண்டி கொண்டு வந்த வரமிளகாய் மூலம் சிறப்பு யாகம் நடைபெற்றது.

வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பொள்ளாச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா விமர்சையாக நடந்தது. இதையொட்டி மீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

சிறப்பு பூஜை

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் வாராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், காளியண்ணன்புதூரில் உள்ள மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் பிற கோவில்களிலும் ஆடிப்பூர விழா நடந்தது.