கோவிலுக்கு யானை ‘விசிட்’; இரவில் தவித்த தொழிலாளர்கள்

0
11

வால்பாறை; வால்பாறை அருகே, கோவிலுக்கு நள்ளிரவில் வந்த ஒற்றையானையால், தொழிலாளர்கள் பீதியடைந்தனர். அதன்பின், தொழிலாளர்கள் இணைந்து யானையை வனத்துக்குள் விரட்டினர்.

வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

குறிப்பாக, வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி, குரங்குமுடி, முருகன்எஸ்டேட், தாய்முடி, கருமலை, அக்காமலை, அய்யர்பாடி, வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தோணிமுடி எஸ்டேட் இரண்டாம் பிரிவில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு முகாமிட்ட ஒற்றை யானை, அங்குள்ள மாரியம்மன் கோவிலின் முன் பகுதியில் உள்ள தடுப்புச்சுவற்றையும், பாக்குமரத்தையும் சேதப்படுத்தியது. இதனால், தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் திரண்டு சென்று, ஒற்றை யானையை பட்டாசு வெடித்தும், அதிக வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட் அடித்தும், டிரம்ஸ் ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.