கோதவாடி குளத்தில் களிமண் அள்ள அனுமதி வழங்கப்படுமா?- மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

0
58

கோதவாடி குளம்

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கைவண்ணத்தில் பல்வேறு வகையான மண் பானைகளை தயார் செய்து அதனை விற்பனை செய்து தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மண்பானைகள் செய்ய தரமான களிமண் கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தின் ஒருபகுதியில் குயவன் குட்டை என்ற பகுதியில் உள்ளது.

இந்த குட்டை பகுதியில் ஆண்டுதோறும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், வருவாய் துறையினர் அனுமதிபெற்று களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கோதவாடி குளத்தில் இருந்து களிமண் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி வழங்க வேண்டும்

இதுபற்றி மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:- கோதவாடி குளத்தில் ஆண்டுதோறும் வருவாய்த்துறை அனுமதி உடன் ஒரு யூனிட் களிமண் கிடைக்கும். அதைக் கொண்டு ஆண்டு முழுவதும் திருக்கார்த்திகை தீபம், பொங்கல் பானை, உருவார பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்களை செய்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக கோதவாடி குளத்திலிருந்து களிமண் எடுக்க எங்களுக்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் கடும் சிரமத்தில் உள்ளோம். இந்த ஆண்டு பொங்களுக்காவது களிமண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்து பல நாட்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும ்இல்லை. கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவு வராததால் கோதவாடி குளத்தில் களிமண் அல்ல முடியாமல் திணறி வருகிறோம். இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பானைகள் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் கோதவாடி குளத்தில் இருந்து களிமண் அள்ள உரிய நடவடிக்ைக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.