கோடை மழையால் மகிழ்ச்சி கீழ்நீராறில் 25 மி.மீ., பதிவு

0
7

வால்பாறை: வால்பாறையில் கோடை மழை பெய்யும் நிலையில், கீழ் நீராறு அணைப்பகுதியில், 25 மி.மீ., மழையளவு பதிவானது.

வால்பாறையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதனால், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் இடையே கோடை மழை பரவலாக பெய்கிறது.

நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் வால்பாறை மக்கள் இருளில் தவித்தனர். கோடை மழை நீடிப்பதால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) விபரம்: வால்பாறை – 23, பரம்பிக்குளம் – 31, மேல்நீராறு – 18, கீழ்நீராறு – 25, மேல்ஆழியாறு – 6, சர்க்கார்பதி – 2 என்ற அளவில் மழை பெய்தது.