கோடை கால சிறப்பு ரெயில்கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் -ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு https://www.dailythanthi.

0
54

நெல்லைக்கு சிறப்பு ரெயில்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்மாவட்ட மக்கள் பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவதற்கு வசதியாக மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க கோரி வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக 3 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட வாரந்திர சிறப்பு ரெயில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாரந்திர கோடை கால சிறப்பு ரெயிலாக வருகிற ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படுகிறது.

கிணத்துக்கடவு ரெயில் நிலையம்

இந்த ரெயில் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் ஜூன் மாதம் 29-ந்தேதி ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறது. இதேபோன்று மறுமார்க்கத்தில் ஏப்ரல் மாதம் 7-ந்தேதி முதல் ஜூன் மாதம் 30-ந்தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என பலமுறை அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் ெரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் மாலை 4:45 மணிக்கு பொள்ளாச்சிக்கும், 5:09 கிணத்துக்கடவும், 6:03 போத்தனூரும், 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு கிளம்பும் இந்த ரெயில் இரவு 8:53மணிக்கு போத்தனூரும், 9:17 மணிக்கு கிணத்துக்கடவிற்கும், 10:03 மணிக்கு பொள்ளாச்சிக்கும், சனிக்கிழமை காலை7:45மணிக்கு நெல்லையை அடைகிறது. இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.