கோடநாடு வழக்கு: குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

0
75

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை அள்ளிச்சென்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்துகின்றனர்.

குணசேகரன் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறிது காலம் கார் ஓட்டுநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.