கே.வி.ஆனந்தின் கனவு படம்!

0
134

`என்.ஜி.கே.’ படம், முடிவடையும் நிலையில் இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படம் முதலில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இப்போது படத்தின் `ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

`என்.ஜி.கே.’ படத்தை அடுத்து சூர்யா, கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் மோகன்லால், ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இது, சூர்யாவின் 37-வது படம். படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த படத்தை கே.வி.ஆனந்த் தனது கனவு படமாக உருவாக்கி வருகிறார் என்றும், சூர்யா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழு வினர் கூறு கிறார்கள்!