கே. ஐ.டி ., மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

0
12

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின், இயந்திரவியல் துறையின் சார்பில், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின், அடல் திறன்மேம்பாட்டு மையத்தின் உதவியுடன், ‘டிஜிட்டல் டிவின் டெக்னாலஜீஸ் இண்டஸ்ட்ரி 5.0’ என்ற தலைப்பில், ஆன்லைன் முறையில் வகுப்பு நடந்தது.

இந்தியாவின் முன்னணி பேராசிரியர்கள் பங்கேற்று, டிஜிட்டல் டிவின் டெக்னாலஜி பற்றி விளக்கவுரை நிகழ்த்தினர்.

கேப்ஜெமினி இன்ஜினியரிங் திட்ட இயக்குனர் சதீஷ், லீட் டெக்னிக்கல் எவாஞ்சலிஸ்ட் இன்டெல் கார்ப்பரேசனைச் சேர்ந்த ஸ்ரீராம் வாசுதேவன், பாலக்காடு ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் சாந்தகுமார் மோகன் ஆகியோர் பேசினர்.

200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பயனடைந்தனர். கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் ஆகியோர், துவக்க நிகழ்வில் பங்கேற்றனர்.