கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த விபத்து சிகிச்சை கருத்தரங்கம்

0
2

கே.எம்.சி.எச்., மருத்துவமனையின், அவசரகால மருத்துவத் துறை சார்பில், விபத்து சிகிச்சை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில், விபத்துகால நிர்வாகம் குறித்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் விபத்துக்கால சிகிச்சைகள் குறித்த நேரடி செயல் விளக்கம் ஆகியவை இடம்பெற்றன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களின் தாக்கம் குறித்து, எடுத்துரைத்த கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, ” சிறந்த வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் கே.எம்.சி.எச்., கோவையில் விபத்துக்கால சிகிச்சையில், முதல்நிலை மையமாகத் திகழ்கிறது,” என்றார்.

முன்னணி மருத்துவமனைகளில் அவசர விபத்து கால சிகிச்சையில் அனுபவம் உள்ள மருத்துவர்கள் ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத்குமார், சவுஜன்யா மற்றும் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து துறை வல்லுனர்கள், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.