கேரள வேளாண் பல்கலையை உலகதரத்துக்கு உயர்த்த சமர்ப்பிக்கப்பட்டது ஆய்வு அறிக்கை

0
7

கோவை, ; கேரள வேளாண் பல்கலையை மறுசீரமைத்து, நவீனமயமாக்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தலைமையிலான ஆணையம், அதன் அறிக்கையை கேரள அரசிடம் வழங்கியது.

2023ம் ஆண்டு, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தலைவராகவும், கேரள வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன்,கேரள வேளாண் பல்கலை முன்னாள் விரிவாக்க இயக்குனர் பாலச்சந்திரன், கேரள வேளாண் பல்கலை துணைவேந்தர் அசோக் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இவர்களுடன், கேரள வேளாண் பல்கலை பதிவாளர் அரவிந்தாக் ஷன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்றனர்.

ஆணையத்தின் பரிந்துரைகள் கொண்ட அறிக்கை, கேரள வேளாண்துறை அமைச்சர் பிரசாத்திடம் நேற்று வழங்கப்பட்டது.

கேரள வேளாண் பல்கலையை, உலக தரத்துக்கு உயர்த்துவது, புதிய படிப்புகளைத் துவங்குவது, கேரள வேளாண் பல்கலை சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இப்பரிந்துரைகளை விரைவில்பரிசீலித்து, நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் பிரசாத் தெரிவித்ததாக, ஆணையத்தின் தலைவர் பாலகுருசாமி தெரிவித்தார்.