கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் கொண்டுவந்து விவசாய தோட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

0
86

கோவையை அடுத்த அன்னூர் அருகே உள்ளஆலம்பாளையம்பகுதியை சேர்ந்தவர்பாலு. இவர்அந்த பகுதியில்உள்ள தன்னுடையநிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 18-ந்தேதி குடும்பத்துடன்இவர்அத்திவரதரை தரிசிக்க காஞ்சீபுரம்சென்று இருந்தார். தரிசனம் முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சொந்தஊர் திரும்பிதோட்டத்திற்குசென்றார்.

அப்போது பிளாஸ்டிக் கழிவுகள் அடைக்கப்பட்ட குப்பை மூட்டைகள் குவியலாக கொட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில்உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது கேரளமாநில பதிவுஎண் கொண்ட லாரி ஒன்று இந்த பகுதியில் நின்று கொண்டு இருந்ததாகவும், அதில் வந்தவர்கள் கழிவுகளை கொட்டி இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பாலு மனுகொடுத்து புகார்அளித்தார். மேலும் இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதுகுறித்துஅந்த பகுதியைசேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் இருந்துபிளாஸ்டிக் மற்றும்மருத்துவ கழிவுகள்எல்லையோர பகுதியானகோவை மாவட்டத்தில் அடிக்கடி கொட்டப்படுகின்றன. இதனால் நிலம் மற்றும் பயிர்கள் நாசமடைகின்றன. மேலும் துர்நாற்றம் பரவி,சுகாதார சீர்கேடுஏற்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நோய் பரவுகிறது. மேலும் அந்த கழிவுகளை கால்நடைகள் தின்று இறந்து விடுகின்றன. இந்த பிரச்சினைகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.