கேமராவில் சிக்கிய ராஜஸ்தான் நபர் போதைப்பொருள் வாங்க பைக் திருட்டு

0
79

கோவை; ஆர்.எஸ் புரம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் மணீஷ், 32. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்த இவர், இங்கு பல்வேறு வேலைகளை செய்து வந்தார். பின்னர் சொந்தமாக துணிக்கடை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், மணீஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானார். பணத்தை போதை பொருட்கள் வாங்குவதில் செலவிட துவங்கினார். பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது, சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஆர்.எஸ் புரம், தியாகி குமரன் தெரு, சுந்தரம் தெரு ஆகியவற்றில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு போயிருப்பதாக ஆர்.எஸ் புரம் போலீசாருக்கு புகார் வந்தது.

‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்து போது, திருட்டில் ஈடுபட்டது மணீஷ் என்பது தெரியவந்தது. மேலும், மணீஷ் அவரது வீட்டின் அருகில் இரு சக்கர வாகனங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மணீஷை கைது செய்தனர். மறைத்து வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.