குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை கடத்தியதாக 2 பேரிடம் விசாரணை

0
64

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை கடத்தியதாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்து மாவு கடத்தல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் பல்லடம் ரோடு 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்க கூடிய சத்து மாவு 4 மூட்டைகளில் தலா 25 கிலோ வீதம் 100 கிலோ இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், ரஞ்சித்குமார் என்பது தெரியவந்தது. மேலும் சாலையோரத்தில் கிடந்த சத்துமாவு மூட்டைகளை மாடுகளுக்கு உணவாக கொடுக்க கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

௨ பேரிடம் விசாரணை

இதையடுத்து அதிகாரிகள் போலீசாரிடம் சத்து மாவு மூட்டைகள் பிடிப்பட்ட 2 பேருக்கு எப்படி கிடைத்தது யார் கொடுத்தார்கள் என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிடிப்பட்ட 2 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ சத்துமாவு மூட்டைகளும் ஒப்படைத்தனர்.