குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம்

0
12

குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம், கே.எம்.சி.எச்.,ல் ஜன.,31 வரை நடக்கிறது.

கே.எம்.சி.எச்., குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ருமேஷ் சந்தர் கூறியதாவது:

தொடர்ச்சியாக குழந்தையின் எடை குறைதல், அதிகாலையில் ஏற்படும் தலைவலி, வாந்தி, கால்களிலோ, மூட்டுகளிலோ வலியும் வீக்கமும் இருத்தல், கழுத்து, மார்பு, தொடை இடுக்கு, அக்குள் பகுதிகளில் நெறிக்கட்டி, பார்வையில் மாறுபாடு, கண்கள் வெளிறிப்போய் இருப்பது, அடிக்கடி காய்ச்சல் வருவது, சாதாரண சிராய்ப்பு ஏற்பட்டாலும் அதிகமாக ரத்தக்கசிவு இருப்பது போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த புற்றுநோயை கீமோதெரபி சிகிச்சை வாயிலாக முற்றிலும் குணப்படுத்த முடியும். இம்புனோதெரபி மருந்துகள் செலுத்திய பின், நோய்வாய்ப்பட்ட எலும்பு மஜ்ஜையை அழித்துவிட்டு, வேறு ஒருவரின் ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜையை செலுத்தி குணப்படுத்தலாம்.

கே.எம்.சி.எச்.,ல் இச்சிகிச்சைக்கான நவீன கருவிகளும், அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம், மருத்துவமனையில் ஜன.,2ல் துவங்கியது. ஜன., 31 வரை நடக்கிறது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில், காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், தலசீமியா, சிக்கில் செல் அனீமியா

புற்றுநோய், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பரிந்துரைக்கப்படுவோருக்கு, 25 சதவீதம் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548 87568, 97901 97971 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.