குற்ற செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு

0
5

கோவை, மார்ச் 24: கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், முக்கிய இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறக் கூடிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்