ஆலோசனை கூட்டம்
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் எதி ரொலியாக வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி, காட்டேஜ், லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்தி வாசன் பேசியதாவது:-
வால்பாறையில் தங்கும் விடுதி, லாட்ஜ், காட்டேஜ் நடத்துபவர் கள் அதற்குரிய உரிமங்களை கட்டாயம் பெற வேண்டும்.
அங்கு தங்க வருபவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை முறை யாக பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்களை போலீஸ் நிலை யத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
ஆலோசனை கூட்டம் போன்ற ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அது போல் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே கூட்டம் நடத்த இடம் கொடுக்க வேண்டும்.
வால்பாறையில் பாதுகாப்பான சுற்றுலாவை மேம்படுத்த உதவ வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை முழுமை யாக சேகரித்த பிறகே பணிக்கு சேர்க்க வேண்டும்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் உடனடியாக போலீஸ் நிலையத் துக்கு தெரிவித்து பாஸ்போர்ட் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவ போலீசார் எப்போதும் தயாராக உள்ளனர்.
ஒத்துழைப்பு
உங்களின் கட்டிடங்களில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதன் பதிவுகளையும் கண்காணிக்க வேண் டும். மேலும் வால்பாறையில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தங்கும் விடுதி காட்டேஜ் லாட்ஜ் உரிமையாளர்கள் கூறுகையில், உரிமம் பெற கால அவகாசம் வேண்டும். வாகனங் கள் நிறுத்த நகராட்சி சார்பில் உரிய இடவசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.கூட்டத்தில் சப் -இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தங்கராஜ் மற்றும் வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ், காட்டேஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.