குரூப் 4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சி பெற இதோ வந்தது அழைப்பு

0
8

கோவை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சியில் சேர, கோவை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், ஜன., 8(இன்று) துவங்கப்படவுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உள்ள, அனைவரும் பங்கேற்கலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது.

ஸ்மார்ட்போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

பங்கேற்க விரும்புபவர்கள், https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இரண்டை எடுத்துக்கொண்டு, அலுவலகத்திற்கு நேரில் வரலாம்.

மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அல்லது, studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.