குப்பையால் குழந்தைகள் ஆரோக்கியம் பாதிப்பு; அகற்றினால் மேம்படும் சுகாதாரம்

0
9

பணியில் மந்தம்

கோவை மாநகராட்சி 38வது வார்டு, கல்வீரம்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகே கட்டப்பட்டு வரும் சிறு பாலம் கட்டும் பணி, மந்தமாக நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கூடுதல் கவனம் செலுத்தி, விரைவில் சிறுபாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும்.

–சண்முகம், பொம்மனம்பாளையம்.

சாலையில் கழிவுநீர்

வார்டு எண் 50, ராஜேஸ்வரி நகரில், ஒரு பேக்கரி சாலையில் கழிவுநீர் வெளியேறுகிறது. அது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

– -தேவதாஸ், ராஜேஸ்வரி நகர்.

குப்பை குவியல்

சீரநாயக்கன்பாளையம் லட்சுமி நகரில், பள்ளி அருகில் சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், அருகில் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. சாலையை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

– -பாலகுமார், சீரநாயக்கன்பாளையம்.

தொடரும் நீர் கசிவு

மாநகரில் 57வது வார்டு தாகூர் நகர் எக்ஸ்டென்ஷன் 2வது வீதி பாதாள சாக்கடை பணியின் போது, நல்ல தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதை அவர்கள் சரிவர இணைக்காததால், நீர் கசிவு தொடர்கிறது. இதை சரி செய்து தர வேண்டும்.

–சிவராஜ், 57வது வார்டு.

சிதறுது கவனம்

மசக்காளிப்பாளையத்தில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் சாலையோரம், பல மரங்களில் கிளைகள் அகற்றப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளன. காற்றடிக்கும் போது, கிளைகளின் இலைகள் பறக்கும் போது, வாகனப் பயணத்தில்கவனம் சிதறுகிறது. இதை அகற்ற வேண்டும்.

ஜெகதீஷ், உப்பிலிபாளையம்