குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம்

0
57

நெகமம் பேரூராட்சி பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நாள்தோறும் தூய்மை பணியாளர்களால் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவை தரம் பிரித்து அகற்றப்படுகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களிடையே, குப்பைகளை தரம் பிரித்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் கு.பத்மலதா தலைமையில் நடந்தது. இதில் மக்கும் குப்பையான காய்கறி கழிவு, மீதமுள்ள உணவு பொருட்கள், அழுகிய காய்கறிகள் மற்றும் மக்காத குப்பையான பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளை தனித்தனியாக பிரித்து அகற்றுதல் குறித்து விளக்கப்பட்டது. மேலும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.