குனியமுத்துார் – மதுக்கரை ரோடு சரி செய்ய கோரி இ.கம்யூ. , மனு

0
56

கோவை; குனியமுத்துார் – மதுக்கரை நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, இ.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இ.கம்யூ., மாநகரம் மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன் கூறியிருப்பதாவது:

கோவை ஆத்துப்பாலத்தில் இருந்து, மதுக்கரை வரை ரோடு இருபுறமும் தோண்டப்பட்டு ஒரு புறம் மட்டும் மூடப்பட்டு உள்ளது. மேற்கு பகுதி மூடப்படாமல் உள்ளது. ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்தும் ஏற்படுகிறது.

எனவே, இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, இ.கம்யூ., கோவை மாநகரம் மத்திய மண்டல நிர்வாகிகள் சுப்ரமணியன், மணிபாரதி உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத்துறை தெற்கு கோட்டம் உதவி பொறியாளர் தங்க அழகர் ராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட, உதவி கோட்டப் பொறியாளர் தங்க அழகர் ராஜன், ”அந்த ரோட்டில் பாதாள சாக்கடைப் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன், ரோட்டை சரி செய்யப்படும்’ என அளித்துள்ளார்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.