மத்திய அரசின் குடியுரிமை திருத்தமசோதாவுக்கு பல்வேறுதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் கோவை வடக்குமாவட்ட தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்ற கழகம்-மனித நேய மக்கள்கட்சி சார்பில்குடியுரிமை திருத்தமசோதாவை திரும்பபெற வலியுறுத்தியும்,மத்தியபா.ஜனதா அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்துகுனியமுத்தூரில்நேற்று மாலைஏராளமானோர்திரண்டனர். ஆனால் இதற்குபோலீசார்அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து,த.மு.மு.க.வினரும், மனித நேய மக்கள் கட்சியினரும்குனியமுத்தூர்பஸ் நிலையத்தில் இருந்து தடையை மீறிஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள்சிறிது தூரம்வந்ததும்போலீசார்தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் குடியுரிமை திருத்த மசோதா நகலை எரிக்க முயன்றனர். அதைபோலீசார்தடுக்கமுயற்சித்தனர். ஆனால் அதையும்மீறி சிலர்நகலை எரித்தனர். உடனேபோலீசார்அவர்களை கைதுசெய்ய முயன்றனர்.
இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்துஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும்இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆர்ப்பாட்டக்காரர்களைபோலீசார்கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்குஅழைத்து சென்றுதங்க வைத்தனர்.
போராட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சிமாவட்ட செயலாளர்ஜெம்பாபுதலைமை தாங்கினார்.மாநில பொருளாளர்உமர்,மாவட்ட துணைசெயலாளர்ஆஷிக்அகமது,மாநில செயலாளர்சாதிக் அலிமற்றும் நிர்வாகிகள்சர்புதீன்,அகமதுகபீர்உள்பட 300 பேரைபோலீசார்கைது செய்தனர்.போலீசாரின்தள்ளுமுள்ளுவில்கட்சி நிர்வாகிஅப்பாஸ்என்பவருக்குநெஞ்சுவலிஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
கோவை மாவட்ட மனித நேயஜனநாயக கட்சிசார்பில்கோவைஆத்துப்பாலத்தில்ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்குமாவட்ட செயலாளர்அப்பாஸ்தலைமை தாங்கினார்.துணை பொதுச் செயலாளர்சுல்தான் மற்றும் கோவைநாசர்உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்குஎதிராகவும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரஆர்ப்பாட்டத்துக்கு பிறகுஅவர்கள் கலைந்து சென்றனர்.