கீரணத்தம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பரபரப்பு ; தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்

0
85

கோவை கீரணத்தம்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,280 வீடுகள் கட்டப்பட்டு அதில் 1,130 வீடுகளில் பொதுமக்கள் குடியேறி உள்ளனர். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு குடிநீர்வினியோகம் செய்ய 4கீழ்நிலை குடிநீர் தொட்டிகள்உள்ளன. இதன் மூலம் வீடுகளில் உள்ளமேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர்ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

இந்தநிலையில்குடிநீர் பம்ப் ஆபரேட்டர்சோணை என்பவர் தண்ணீரைமேல்நிலை தொட்டிக்குஏற்றும் பணிக்காகமோட்டார் பம்ப் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வெள்ளை நிறத்தில் ஏதோ திரவம் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாட்டில்இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தண்ணீரில் யாரோ விஷம் கலந்துவிட்டார்கள் என்று கருதி அவர் தண்ணீரைமேல்நிலை தொட்டிக்குஏற்றாமல்அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்தார்.

இதுபற்றிய தகவல்அறிந்ததும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடனடியாகஅந்த குடியிருப்புபகுதிக்குவிரைந்து வந்தனர். அங்கு வந்துமோட்டார் பம்ப் அறைக்கு சென்று பார்த்த போது வெள்ளைநிற திரவம்உள்ள ஒரு பாட்டில் திறந்த நிலையில் இருந்தது.இதனை தொடர்ந்துஅவர்கள் உயர்அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்தனர். அவர்களின் உத்தரவின் பேரில்கீழ்நிலை தொட்டியில்இருந்த 30 ஆயிரம்லிட்டர் தண்ணீரைமோட்டார் மூலம் வெளியேற்றினர்.

மேலும் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.இதன்பின்னர்மோட்டார் பம்ப்உள்ள அறைக்குள் சம்பந்தம் இல்லாதவர்கள் யாரும் உள்ளே நுழையாத வகையில் புதிய பூட்டை வாங்கி பூட்டினர். கீரணத்தம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில்பொதுமக்களுக்கு வினியோகிக்க இருந்த குடிநீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது என்ற தகவலால்அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் குடிநீரில் விஷம் கலக்கவில்லைஎன்பது தெரியவந்தது.

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில்உள்ளவர்களுக்கு ஏற்கனவே குடிநீர் போதுமான அளவு இல்லாத நிலையில் குடிநீரில் விஷம் கலந்துஇருப்பதாக கூறி தண்ணீரைவீணாக்கியதுஅப்பகுதிமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களின்பாதுகாப்பை கருதிஇதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.பொதுமக்களுக்கு தேவையானகுடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.