கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

0
93

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பி.ஏ.பி. கால்வாயில் இருந்து செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் 3-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டிபாளையம், கப்பிணிபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்குக்காடு, தேவணாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கருகிய தென்னை மரங்கள் துளிர்விட தொடங்கியது. மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், நிலக்கடலை, தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, பொறியல் தட்டை, பச்சை மிளகாய், உள்பட பல்வேறு வகையானவைகளை சாகுபடி செய்து இருந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் 2 மாதங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களின் விளைச்சல் தொடங்கியது. மேலும் உழவு பணிகள் செய்து விளை நிலங்கள் குளிர்ந்த பூமியாக காணப்பட்டது. இதையடுத்து பி.ஏ.பி.அணையில் இருந்து செட்டியக்காபாளையம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 7 நாட்கள் செட்டியக்காபாளையம் கிளைவாய்க்காலில் தண்ணீர் வரும். இதன் மூலம் 2500 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுவதுடன், அந்த பகுதியில் நீர்மட்டம் உயரும். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.