வால்பாறை; கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வால்பாறையில் கேரல் பவனி துவங்கி உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இம்மாதம், 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் சார்பில், கேரல் பவனி துவங்கியது.சர்ச் வளாகத்தில் துவங்கிய கேரல் பவனியை ஆனைமலை மறை மாவட்ட தலைவர் சார்லிபன் துவக்கி வைத்தார்.
பவனியில் சபை உறுப்பினர்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்கு நேரில் சென்று, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்களை பாடினர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இரவு, 10:00 மணிக்கு முன்னதாக கேரல் பவனியை முடிக்க வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.