கோவை; கோவை நவக்கரை ஏ.ஜே.கே.,கலை, கல்லூரியின் பைக்கர்ஸ் கிளப் சார்பில், கிறிஸ்துமஸ் பைக் பேரணி, ரேஸ்கோர்ஸில் நேற்று நடந்தது.
பேரணியை கல்லூரியின் முதல்வர் ராஜு துவக்கி வைத்தார். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள், பைக்குகளில் வலம் வந்தனர். அமைதி மற்றும் மகிழ்ச்சி என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, இந்த பைக் பேரணி நடந்தது. பைக்கில் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள், வழியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு, இனிப்புகளை வழங்கினர்.