கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்

0
8

கோவை, மார்ச் 12: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பேரவை மாநில பொது செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அரசு கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா தருவதில்லை என முடிவு எடுத்தது பாராட்டுக்கு உரியது. வரும் 23ம் தேதி ஒலம்பசில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அனைத்து கிராம கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் முதன்மைப்படுத்தி கற்று தர வேண்டும். இதை செயல்படுத்தாமல் இருக்கும் பள்ளிகளை தடை செய்ய வேண்டும். மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.