ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றிரவு அவர்கள் மீது தீவிரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். அவனிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிரவாதியின் அடையாளம் மற்றும் எந்த குழுவை சேர்ந்தவன் ஆகியவை பற்றி போலீசார் உறுதியான தகவலை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவரும் காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.