காரச்சேரியில் கிராம சபை கூட்டம்-கலெக்டர் சமீரன் பங்கேற்பு

0
67

குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசம்பாளையம் காரச்சேரியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கிராமசபை என்பது கிராமத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட முடிவுகளை கிராமசபை கூடிதான் முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களை போல் கிராம சபை மிக முக்கிய அமைப்பாகும். சாலைஅமைப்பு, வடிகால், பொது குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம். அரசின் திட்டங்கள் அனைத்து தரப்புமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி தொழுநோய் உறுதிமொழி ஆகிவற்றை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), அலர்மேல்மங்கை, பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குநர் செல்வம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலகண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.