காப்பீட்டு நிறுவனங்கள் மீது ஓய்வூதியர்கள் குற்றச்சாட்டு : ‘கேஷ்லெஸ்’ சிகிச்சை வழங்க மறுப்பு

0
8

கோவை,; பென்ஷனர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தாலும், மருத்துவமனையில் ‘கேஷ் லெஸ்’ நடைமுறையை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பின்பற்றாமல் இருப்பதாக, ஓய்வூதியர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பென்சனர்களுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் பென்சனில், ஒரு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம், 479 ரூபாயை மாதந்தோறும் பிடித்தம் செய்கிறது.

கோவையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பென்சனர்கள் உள்ளனர். இவர்கள், மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ள, பல மருத்துவமனைகளில், ‘கேஷ்லெஸ்’ சேவை மறுக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, கோவை சித்தாபுதுாரை சேர்ந்த ஓய்வூதியர் பொன்வேலாயுதன் கூறியதாவது: பெரும்பாலான ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ காப்பீட்டுத்தொகை வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கினாலும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு செய்த முழுதொகை வந்து சேருவதில்லை.

கண், கருப்பை, குடலிறக்கம், எலும்பு முறிவு, இருதய அறுவை சிகிச்சை என்று கட்டணத்தை வகைப்படுத்தி, அதற்கேற்ப தொகையை வழங்குகின்றனர். இது, செலவு செய்த தொகையை விட மிககுறைவாக உள்ளது.

அப்படி இருக்கும் சூழலில், நாங்கள் எதற்கு மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டுத்தொகைக்காக, 479 ரூபாயை செலுத்த வேண்டும்? ஒவ்வொரு பென்ஷனரிடமிருந்தும், இவ்வளவு தொகையை பெற்றுக்கொண்டு, எங்களுக்கு பணம் பெறாமல் ஏன் சிகிச்சை வழங்குவதில்லை

இதற்கு அரசு காப்பீட்டு நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் பலமுறை மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் கலெக்டர் நடத்தும், ஓய்வூதியர் குறை தீர்ப்புக்கூட்டத்தில் முறையிட்டும், நியாயம் கிடைக்கவில்லை.

இவ்வாறு, பொன்வேலாயுதன் கூறினார்.

மாவட்ட கருவூல அதிகாரிகள் கூறுகையில், ‘அரசின் விதிமுறை மற்றும் நடைமுறையை மாற்ற, எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால் வழக்கம் போல், கமிட்டி கூடிதான் மருத்துவ ரசீது அடிப்படையில் தொகை வழங்கப்படுகிறது’ என்று சாக்கு போக்கு கூறுகின்றனர்.

கண், கருப்பை, குடலிறக்கம், எலும்பு முறிவு, இருதய அறுவை சிகிச்சை என்று கட்டணத்தை வகைப்படுத்தி, அதற்கேற்ப தொகையை வழங்குகின்றனர். இது, செலவு செய்த தொகையை விட மிககுறைவாக உள்ளது.

அப்படி இருக்கும் சூழலில், நாங்கள் எதற்கு மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டுத்தொகைக்காக, 479 ரூபாயை செலுத்த வேண்டும்? ஒவ்வொரு

பென்ஷனரிடமிருந்தும், இவ்வளவு தொகையை பெற்றுக்கொண்டு, எங்களுக்கு பணம் பெறாமல் ஏன் சிகிச்சை வழங்குவதில்லை?

 

ஓய்வூதியர்கள் அனைவரும் வெறுப்பு

* ஓய்வூதியர்களுக்கு கேஷ்லெஸ் சேவை மறுக்கப்படும் நிலையில், கையில் இருந்து பணம் செலுத்திய பின்பே, அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும்.* சிகிச்சைக்குப் பின் ஒரிஜினல் மற்றும் நகல் என்று, இரண்டு பில்களை பெற்று பத்திரமாக வாங்கி வைத்திருக்க வேண்டும். ஒரிஜினலை பத்திரப்படுத்தி, விசாரணையின் போது காண்பிக்க வேண்டும்.* நகல் பில்லை, கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரிஜினல் பில்லை கையில் வைத்திருக்க வேண்டும். பில் சென்றடைந்த உடன், இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து நேரடி விசாரணைக்கு அழைப்பு வரும்.* விசாரணைக்குப் பின் கலெக்டர், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்டகருவூல அலுவலர், காப்பீட்டு நிறுவன அலுவலர் ஆகியோர் கொண்ட குழு, மருத்துவமனையில் வழங்கப்பட்ட பில் குறித்து, எவ்வளவு தொகை வழங்கலாம் என்று முடிவு செய்யும்.* அக்குழு எவ்வளவு தொகையை அனுமதிக்கிறதோ, அந்த தொகையைதான் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். * அக்குழுவால் நிராகரிக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கு செலுத்திய தொகையை திரும்ப பெற முடியாத நிலை ஏற்படும்.இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதுதான், ஓய்வூதியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் விடுக்கும் முக்கிய வேண்டுகோள்.